×

வலிமை சண்டை காட்சியில் அஜித்துக்கு காயம்

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். எச்.வினோத் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிப்பது யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பெயர்கள் அடிபட்டன. கடைசியாக காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹூமா குரோஷியில் வந்து நிற்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி ஐதராபாத்தில் நடந்தது.

அஜீத் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் பைக் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள், அஜித் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

Tags : Ajithiku ,
× RELATED தீவுகளில் உருவான மழை பிடிக்காத மனிதன்